திங்கள், ஜனவரி 09, 2012

புயலுக்கே காக்க முடியவில்லையாம், கதிர்வீச்சில் காப்பாற்றிவிடுவார்களா?-உதயகுமார்


புதுச்சேரி: ஆர்ச் பிஷப் கூறினால் கூடங்குளம் போராட்டம் நின்றுவிடும் என்று காங்கிரஸ் தலைவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் ஆண்டவரே வந்து சொன்னாலும் இந்த போராட்டம் ஓயாது என்று கூடங்குளம் அணுமின் நிலைய‌த்திற்கு எ‌திரான போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் புது‌ச்சே‌ரி‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் கூறியதாவது,

அணுசக்திக்கு எதிரான போராட்டம் மக்கள் எழுச்சியுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தானே புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மக்களுக்கு ஆறுதலை த‌ெ‌ரி‌வி‌த்துக் கொள்கின்றோம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புயலுக்கே மக்களை பாதுகாக்க முடியாத இந்த மத்திய, மாநில அரசுகள் அணுக் கதிர்வீச்சு வெளிப்பட்டால் எத்தகைய நடவடிக்கை எடுக்கும் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டு‌ம். 

போராட்டத்தை சில காங்கிரஸ் தலைவர்கள் அடக்கப் பார்க்கின்றனர். இந்த போராட்டம் கிறிஸ்தவர்களின் போராட்டம். ஆர்ச் பிஷப் கூறினால் போராட்டம் நின்றுவிடும் என்று அவர்கள் வேண்டும் என்றே பிரச்சாரம் செய்கின்றனர். 

ஆனால் ஆண்டவரே வந்து கூறினாலும் இந்த போராட்டம் ஓயாது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடும் வரை எங்கள் போராட்டம் தொடரும் எ‌ன்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக