வாஷிங்டன்:ஈராக் ஆக்கிரமிப்பிற்கிடையே அமெரிக்க ராணுவம் 24 சிவிலியன்களை கொலை செய்த வழக்கின் விசாரணை இன்று துவங்குகிறது. கலிஃபோர்னியாவில் ராணுவ நீதிமன்றத்தில் ஜூரியை தேர்வுச்செய்யும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் இன்று நடைபெறும். தொடர்ந்து விசாரணை துவங்கும். கண்ணி வெடிக்குண்டு
தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரன் கொல்லப்பட்டதன் பெயரால் 2005 நவம்பர் 19-ஆம் தேதி வெறிப்பிடித்த அமெரிக்க ராணுவ வீரர்கள் ஹதீஸாவில் ஒரு வீட்டில் நுழைந்து பெண்கள், குழந்தைகள் உள்பட 19 பேரை சுட்டுக்கொன்றனர். பின்னர் காரில் பயணித்த ஐந்து பேரையும் சுட்டுக்கொன்றனர்.10 பெண்களையும், குழந்தைகளையும் மிக அருகில் இருந்து கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக