கோழிக்கோட்டில் கேரள முதல் அமைச்சரின் காரை சுற்றி வளைத்து அவருக்கு கறுப்புக்கொடி காண்பித்த முஸ்லிம்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டி பள்ளிக்கூட விழாவில் கலந்துக் கொள்வதற்காக நேற்று கோழிக்கோடு சென்றார். விழா முடிவடைந்த பின்னர் தனது காரில் ஏற வந்த போது, முஸ்லிம் அமைப்பு ஒன்றினை சேர்ந்த 12 பேர், கேரளாவில் முஸ்லிம்கள் மீது காவல்துறையினர் அடக்குமுறையினை கையாள்வதாகவும், பல்வேறு பொய் வழக்குகளை வேண்டுமென்றே பதிவு செய்து முஸ்லிம்களை இன்னலுக்குள்ளாக்கின்றனர் என்றும் குற்றஞ்சாட்டி, முதல் அமைச்சர் உம்மன் சாண்டிக்கு எதிராக கோஷம் எழுப்பி, கறுப்பு கொடியை ஏந்தியவாறு காரை முற்றுகையிட்டனர்.
உடனடியாக காவல் துறையினர் கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்தனர். முதல் அமைச்சரின் காரை சுற்றி வளைத்து அவருக்கு கறுப்புக்கொடி காண்பித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக