இவர்கள் மீண்டும் அமெரிக்காவிலேயே குடியேற விண்ணப்பித்தால், அவர்கள் எத்தனை ஆண்டுகள் சட்ட விரோதமாக அமெரிக்காவில் வசித்தார்களோ, அத்தனை ஆண்டுகளுக்கு மீண்டும் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது. (உதாரணத்துக்கு ஒருவர் 3 வருடம் அமெரிக்காவில் சட்ட விரோதமாக வசித்து பிடிபட்டால், அவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அங்கு நுழைய அனுமதி கோரி விண்ணப்பிக்க கூட கிடைக்காது).
இதனால் ஏற்கனவே அமெரிக்காவில் குடியேறிய குடும்பத்தினருடன் சேருவதற்காக சட்ட விரோதமாக நுழைவோர், குடும்பங்களை விட்டு நீண்ட காலம் அமெரிக்காவுக்கு வெளியே தங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இவ்வாறு சட்ட விரோதமாக குடியேறுவதில் பெரும்பாலானோர் தென் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களே.
இந் நிலையில், ஒருவர் சட்ட விரோதமாகக் குடியேறினாலும், உரிய அனுமதி கிடைக்கும் வரை, அமெரிக்காவிலேயே தங்கியிருக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்தை ஒபாமா அரசு கொண்டு வரவுள்ளது.
சட்ட விரோதமாகக் குடியேறுவோர் திருப்பி அனுப்பப்படுவதால், அமெரிக்காவில் உள்ள அவரது குடும்பத்துடன் நீண்டகாலமாக சேர முடியாமல் போவதாலும், குடும்பங்கள் நீண்டகாலம் பிரிந்து போய்விடுவதைத் தவிர்க்கவுமே, இந்தத் திருத்தம் கொண்டு வரப்படுவதாக ஒபாமா அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ஒபாமா, பெருவாரியாக உள்ள லத்தீன் அமெரிக்கர்களின் ஓட்டுக்களை மனதில் வைத்து இந்தத் திட்டத்தை அறிவிக்கவுள்ளதாகத் தெரிகிறது.
இது கிட்டத்தட்ட சட்ட விரோத குடியேற்றத்தை மறைமுகமாக ஊக்குவிக்கும் செயல் தான் என்று எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக