ஞாயிறு, ஜனவரி 22, 2012

6.2 ரிக்டர் அளவில் பதிவானது: மெக்சிகோவில் நிலநடுக்கம்- அலறியடித்து மக்கள் ஓட்டம் !

6.2 ரிக்டர் அளவில் பதிவானது:
 
 மெக்சிகோவில் நிலநடுக்கம்-
 
 அலறியடித்து மக்கள் ஓட்டம்மெக்சிகோவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.   மெக்சிகோவில் கவுதமலா எல்லையை ஒட்டியுள்ள பசிபிக் கடல் பகுதியில் சியாபாஸ் மாகாணம் உள்ளது. அங்குள்ள மபாஸ் டெபெக் நகரில் நேற்று மதியம் 12.27 மணிக்கு கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் குலுங்கின. ஜன்னல்கள் அசைந்தாடின. எனவே பொதுமக்கள் பதட்டமும், அச்சமும் அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர்.  
 
இதற்கிடையே ரிக்டர் அளவில் 6.2 ஆக நில நடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் சர்வே மையம் அறிவித்தது. பூமிக்கு அடியில் 40 மைல் ஆழத்தில் இது உருவானதாகவும் தெரிவிக்கப்பட்டது.
 
இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் மற்றும் உயிரிழப்பு சம்பவங்கள் குறித்த தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை. மபாஸ்டெபெக் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் சியாபாஸ் மாகாணம் முழுவதும் உணரப்பட்டது. பல 100 மைல் தொலைவில் உள்ள எல்சால்வேடர் நாட்டின் தலைநகரம் சான் சால்வேடரிலும் பூமி குலுங்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக