இப்பிரதேசங்களில் இருந்து 13 பலஸ்தீனர்கள் ஆக்கிரமிப்புப் படையால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். அல் கலீல் நகரத்திலிருந்து 6 பலஸ்தீனர்களும் அல் அரூப் அகதி முகாமிலிருந்து 2 பேரும்
இவ்வாறு ஆக்கிரமிப்புப் படையினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளவர்களில் உள்ளடங்குவர்.இப் பிரதேசத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை, 'தேடுதல் நடவடிக்கை' என்ற போர்வையில் இரவு பகலென்று பாராமல் பலஸ்தீனர்களின் வீடுகளுக்குள் அத்துமீறிப் புகுந்து அடாவடித்தனங்கள் புரிவது, ஆட்களைக் கடத்திச் சென்று வதைமுகாம்களில் எந்தவித விசாரணையுமின்றி வருடக் கணக்கில் அடைத்துவைப்பது முதலான நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக உள்ளூர்வாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக