செவ்வாய், டிசம்பர் 13, 2011

ஐஎஸ்ஐயுடன் தொடர்பா?: நிரூபித்தால் அரசியலைவிட்டுவிடுகிறேன்- இம்ரான் கான்

Imran Khanஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான இம்ரான் கானின் கட்சியான தெஹ்ரிக்-இசஇன்சாபுக்கும், அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கும் தொடர்பு உள்ளது என்று கூறப்படுகின்றது. ஆனால் இதை மறுத்துள்ள இம்ரான் கான் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அரசியலை விட்டுவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.


கடந்த சில மாதங்களில் இம்ரான் கானின் கட்சி அபார வளர்ச்சி அடைந்துள்ளது. அதிலும் கடந்த அக்டோபர் மாதம் லாகூரில் நடத்திய பேரணிக்குப் பிறகு அக்கட்சியின் புகழ் எட்டுத் திக்கும் பரவியுள்ளது. ஆனால் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.ன் ஆதரவால் தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் பெரிய கட்சியாகியுள்ளது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே பிற கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்கள் இம்ரான் கானின் கட்சியில் சேர்ந்துள்ளனர். 

இந்நிலையில் அண்மைக் காலமாக இந்தியாவுடன் நல்லுறவு வைத்துள்ள பாகிஸ்தான் விமானப் படையின் முன்னாள் தலைவரும், அரசியல்வாதியுமான அஸ்கர் கான்(90) நேற்று இம்ரான் கட்சியில் சேர்ந்துள்ளார்.

தனது கட்சி மீது எழுந்துள்ள சந்தேகம் பற்றி இம்ரான் கான் கூறியதாவது,

எனது கட்சிக்கு ஐ.எஸ்.ஐ. ஆதரவளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்துமாறு உச்ச நீதிமன்றத்தை கேட்டுக் கொள்கிறேன். நானோ, எனது கட்சியோ ஐ.எஸ்.ஐ. அமைப்பிடம் இருந்து பணம் பெற்றோம் என்பது நிரூபிக்கப்பட்டால் அரசியலை விட்டுவிடுகிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக