செவ்வாய், டிசம்பர் 13, 2011

டிஎன்பிஎஸ்சி மூலம் பல் மருத்துவர்கள் நியமனத்தில் முறைகேடு- புரோக்கர்கள் வீடுகளில் ரெய்ட்

TNPSCசென்னை: தமிழக அரசின் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி மூலம் பல் மருத்துவர்கள், பிரேக் இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்ததையடுத்து, இதில் தொடர்புடைய புரோகக்கர்கள் வீடுகளில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழகம் முழுவதும் இந்த ரெய்டுகள் நடக்கின்றன.


முன்னதாக இந்தத் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 , குரூப் 2 அலுவலர்கள் தேர்விலும் முறைகேடு நடந்ததாகக் கூறி கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இயக்குனர் செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 16 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். சென்னை மற்றும் திருச்சியில் அந்த ரெய்டுகள் நடந்தன.

இதைத் தொடர்ந்து நவம்பர் 18ம் தேதி சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. இணைச் செயலாளர் மைக்கேல் ஜெரால்ட், கீழநிலை செயலாளர் ரவி இளங்கோவன் மற்றும் அலுவலர்கள் உஷா, ராமமூர்த்தி, லோகநாதன், பாலாஜி, ராதாகிருஷ்ணன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரின் நேர்முக உதவியாளர் சதீஷ்குமார் மற்றும் சுகுமாரன் ஆகியோர் உள்ளிட்ட பலரது வீடுகளில் சோதனைகள் நடந்தன. மொத்தம் 14 இடங்களில் அந்த ரெய்டுகள் நடந்தன.

இந் நிலையில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் பல் மருத்துவர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் (break inspector) பதவிக்கு நியமனம் செய்ப்பட்டதில் பலர் லஞ்கம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று சென்னையில் 13 இடங்களிலும், மதுரை, சேலத்தில் 5 இடங்களிலும், திருச்சி, காஞ்சிபுரம். நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் என 35 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக