
முர்ஸியின் உத்தரவால், எகிப்தில் அதிபருக்கும், ராணுவத்திற்கும் இடையே புதிய மோதல் சூழலை உருவாக்கும் என அரசியல் சாசன நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், முர்ஸியின் உத்தரவை இஃவானுல் முஸ்லிமீன் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
முன்னாள் சர்வதேச அணுசக்தி ஏஜன்சி தலைவர் முஹம்மது அல்பராதி, முர்ஸியின் உத்தரவில் கருத்து முரண்பட்டுள்ளார். பாராளுமன்ற கூட்டம் நடத்துவதற்கான முர்ஸியின் உத்தரவு சட்ட விரோதமானதும், நீதிமன்றத்தை அவமதிப்பதுமாகும் என பராதி கூறினார்.
கடந்த மாதம் 14-ஆம் தேதி அரசியல் சாசன உச்சநீதிமன்றம் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அன்று ஆட்சியில் இருந்த ராணுவ கவுன்சில் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக