திமுக தலைவர் கருணாநிதியைத் தொடாமல் தமிழகத்தில் அரசியல் செய்ய இயலாது என்றும், அதனால்தான் தாம் அவரை விமர்சனம் செய்து வருவதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர்,”பதவியை இழந்த ஒன்றரை ஆண்டுகளில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென திமுகவினருக்கு எண்ணம் இருப்பதில் உள்ள நியாயம் எனக்குப் தமிழகத்தில் கருணாநிதியைத் தொடாமல் யாரும் அரசியல் செய்ய இயலாது.அவர் நல்லது செய்தாலும், கெட்டது செய்தாலும் விமர்சனம் செய்திருக்கிறேன். காங்கிரஸ் கட்சியில் இருப்பதாலும், எனது கொள்கையின் அடிப்படையிலும் கருணாநிதியை விமர்சனம் செய்து வருகிறேன்.
திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தியதைப் பாராட்டுகிறேன்.அதேநேரத்தில் மின் கட்டண உயர்வு செய்தபோது இதுபோலப் போராட்டம் நடத்தியிருந்தால் இதைவிட மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கும்” என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக