செவ்வாய், மார்ச் 06, 2012

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி !

 அணு ஆயுதத்தை சுமந்து சென்று நிர்ணயித்த இலக்கை துல்லியமாகத் தாக்கவல்ல பாகிஸ்தானின் புதிய ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது. ஹட்ஃப்-2 அல்லது அப்தலி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து சென்று 180 கிலோ மீட்டர் தூரம் வரை தாக்கவல்லது. தரையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தை தாக்கவல்லது. இந்தியாவின் பகுதிகளை குறிவைத்து தாக்கும் வண்ணம் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
 இந்த ஏவுகணை திங்கள்கிழமை சோதிக்கப்பட்டது. அது சீறிச் சென்று நிர்ணயித்த இலக்கை துல்லியமாகத் தாக்கி அழித்ததாக அந்நாட்டு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
 ஆனால் ஏவுகணை எந்த இடத்தில் சோதிக்கப்பட்டது; எந்த நேரத்தில் சோதிக்கப்பட்டது என்பது குறித்து எவ்விதத் தகவலும் இல்லை.
 இந்த சோதனை நிகழ்வில் நாட்டின் முக்கிய ராணுவ அதிகாரிகள், போர்க் கருவிகள் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆகியோர் கலந்து கொண்டதாகவும் அந்நாட்டு ராணுவ வட்டாரங்கள் கூறின.
 இந்த ஏவுகணையை ராணுவத்தில் சேர்ப்பதன் மூலம் தமது நாட்டின் ராணுவ பலம் மேலும் வலுப்பெறும் என்று அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக