செவ்வாய், மார்ச் 06, 2012

ஈராக்:தாக்குதலில் 27 போலீஸ்காரர்கள் படுகொலை

பாக்தாத்:மேற்கு ஈராக்கில் ஹதீஸா நகரத்தில் நடந்த தொடர் தாக்குதலில் 27 போலீஸ்காரர்கள் பலியாகினர். பாதுகாப்பு படையினரின் செக்போஸ்டுகளை குறிவைத்து துப்பாக்கிய ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதல் ஒரு மணிநேரம் நகரத்தை பீதி வயப்படுத்தியது.  இரண்டு மூத்த போலீஸ் அதிகாரிகளை வீடுகளில் இருந்து கடத்திச் சென்று கொலைச் செய்யப்பட்டதுடன் தாக்குதல்
துவங்கியது. பின்னர் போலீஸ் சீருடையில் நகரத்தில் களமிறங்கிய துப்பாக்கி ஏந்திய நபர்கள் பாதுகாப்பு செக்போஸ்டுகள் மீது சரமாரியாக சுட ஆரம்பித்தனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் வர்த்தக வங்கியில் நடந்த வெடிக்குண்டு தாக்குதலுக்கு பிறகு ஹதீஸாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இத வாகும்.தாக்குதலின் பின்னணியில் அல்காயிதா போராளி குழு செயல்பட்டுள்ளதாக போலீஸ் செய்தி தொடர்பாளர் மேஜர் தாரிக் ஸயாஹ் ஹர்தான் குற்றம் சாட்டியுள்ளார். தாக்குதல் நடத்தியவர்களின் வாகனங்களில் இருந்து அல்காயிதா தொடர்பான பிரசுரங்கள் கிடைத்ததாக அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக