செவ்வாய், மார்ச் 06, 2012

காஷ்மீர் பாதுகாப்பு படையினர் மீது 304 வழக்குகள் பதிவு !

காஷ்மீர் மாநில உள்ளூர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் ஆகி‌யோர் மீது கடந்த மூன்று ஆண்டுகளில் 304 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜம்முகாஷ்மீர் சட்டசபையில், மாநில சட்டம் ஒழுங்கு குறித்த கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில், பாதுகாப்புப் படையினரின் அத்துமீறல்கள் காரணமாக மொத்தம் 304 வழக்குகளும் பல்வேறு காவல் நிலையங்களில் எப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்பட்டு்ள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவற்றில் 230 வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக