டமாஸ்கஸ்:குழந்தை பருவம் – விளையாடவும், சிரிக்கவும், சித்திரங்களை வரைக்கவும் அன்னையரின் மடியில் கிடந்து கதைகளை கேட்பதற்குமான பருவம். ஆனால், சிரியாவில் குழந்தைகளின் நிலைமையோ முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது. சிரியாவின் சர்வாதிகாரி பஸ்ஸாருல் ஆஸாதின் ஆட்சியை அகற்றுவதற்காக துவங்கிய
போராட்டத்தில் உயிரை தியாகம் செய்தவர்களில் முக்கியமானவர் பாலகன் 13 வயதான ஹம்ஸா அல் காத்திப்.
2011 ஏப்ரல் 29-ஆம் தேதி நடந்த பஸ்ஸாருல் ஆஸாதிற்கு எதிரான போராட்டத்தில் வயதில் மூத்தவர்களுடன் துணிச்சலுடன் களமிறங்கிய ஹம்ஸாவை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். மிருகத்தனமான சித்திரவதைகளுக்கு பிறகு பஸ்ஸாரின் காட்டுமிராண்டி ராணுவம் ஹம்ஸாவை கொலைச் செய்தது. மே 25-ஆம் தேதி தீ காயங்களும், குண்டு துளைத்த அடையாளங்களும் அவனுடைய உடலில் காணப்பட்டன.
உலகில் சிரியாவில் வாழும் மக்கள் மரணத்தை நேருக்கு நேராக சந்திக்கின்றனர். சிறிய வயதிலேயே அவர்கள் மரணத்தின் வாயிலை நோக்கி தள்ளப்படுகின்றனர்.
பஸ்ஸாரின் அரசு அதிகாரத்தில் இருந்து அகற்றப்படுவதை காண்பதற்கான ஆர்வத்தை மூடிக்கிடக்கும் கல்வி நிலையங்களின் சுவர்களில் குழந்தைகள் எழுத்துக்களில் வடித்துள்ளனர். புரட்சி முழக்கங்கள் எழுதப்பட்ட பேனர்களுடன் குழந்தைகள் போராட்டம் நடத்தும் காட்சிகள் யூ ட்யூபிலும், ஃபேஸ்புக் போன்ற சமூக இணையதளங்களிலும் இடம்பெற்றுள்ளன.
தொடரும் குண்டு வீச்சுகள், வெடிச்சத்தங்களால் மனோரீதியான பாதிப்புகளையும் குழந்தைகள் சந்திக்கின்றார்கள்.
2011 மார்ச் மாதம் துவங்கிய பஸ்ஸாருல் ஆஸாதிற்கு எதிரான போராட்டத்தில் 500க்கும் அதிகமான குழந்தைகள் கொலைச் செய்யப்பட்டார்கள் என்று ஐ.நா அறிக்கை கூறுகிறது. மனித உரிமை அமைப்புகள் ஐ.நா வின் புள்ளிவிபரத்தை விட இரண்டு மடங்கு என்று கூறுகின்றன.
2011 நவம்பர் மாதம் ஐ.நாவின் சர்வதேச சுதந்திர விசாரணை கமிஷன் அறிக்கையின் படி சிரியாவில் குழந்தைகள் கடுமையான அடக்குமுறைகளை சந்தித்து வருவதாக கூறுகிறது. குழந்தைகளின் உரிமைகளுக்கு பஸ்ஸாரின் அரசு எவ்வித மதிப்பும் அளிப்பதில்லை. சிரியா முழுவதும் ஆண் குழந்தைகள் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டின் மூலம் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா விசாரணை கமிஷன் கூறுகிறது.
உறவினர்கள் கொலைச் செய்யப்படுவதை நேரில் கண்ட குழந்தைகளை விசாரணை குழுவினர் நேரடியாக சந்தித்தனர். இவர்களில் எல்லையை கடக்கும் வேளையில் துப்பாக்கிச்சூட்டில் மரணித்த பெண்மணியின் இரண்டு வயது மகளும் அடங்குவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக