சனி, மார்ச் 10, 2012

புற்றுநோய் குறித்த செய்தி: எர்துகான் மறுப்பு

அங்காரா:தனக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தியை துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் மறுத்துள்ளார்.
இதுக்குறித்து அவர் கூறியது: ‘அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன். அவனால் மட்டுமே ஒருவர் எப்பொழுது மரணிப்பார் என்பதை அறியமுடியும்’ என்று தெரிவித்துள்ளார். ஒரு பிரபல துருக்கி பத்திரிகையில் எர்துகானுக்கு குடலில் புற்றுநோய்
ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டு வருடங்கள் மட்டுமே அவர் உயிரோடு இருப்பார் என்றும் செய்தி வெளியானது. தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் இ-மெயில் முகவரியை ரகசியமாக நோட்டமிட்டு அளித்த செய்தியில் இதனை அப்பத்திரிகை தெரிவித்தது.
கடந்த நவம்பர் மாதம் எர்துகானுக்கு அறுவை சிகிட்சை ஒன்று நடந்தது. இதன் அடிப்படையில் இந்த செய்தி வெளியாகியிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக