அமைதியான முறையில் அணுசக்தியை தயாரிக்கும்
ஈரானின் உரிமையை மதிப்பதாக மாநாடு அறிவித்தது. சர்வதேச அணுசக்தி
ஏஜன்சியுடன் ஒத்துழைத்து இதனை மேற்கொள்ளவேண்டும் என்று சுட்டிக்காட்டிய
மாநாடு, ஈரானின் அணுசக்தி தொடர்பாக பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடியை
அமைதியான முறையில் தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தியது. அதேவேளையில்,
ஜி.சி.சி நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் ஈரானின் செயலை
அங்கீகரிக்க இயலாது என்றும், இவற்றை கைவிட்டு விட்டு அண்டை நாடுகளுடன்
நல்லுறவை பேணவும், சர்வதேச சட்டங்களை மதிக்கவும் ஈரான் தயாராகவேண்டும்
என்று மாநாட்டில் வெளியிடப்பட்ட பிரகடனம் கோரிக்கை விடுத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக