சனி, மார்ச் 10, 2012

பூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல் !

டோக்கியோ:கடந்த ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் தொடர்ந்து உருவான சுனாமியை தொடர்ந்து தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிக்கை கூறுகிறது. புகுஷிமா அணுமின்நிலையம் சேதமடைய காரணமான பூகம்பத்தின் கெடுதிகளை குறித்த பீதி காரணமாக மக்கள் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளதாக அரசு
கூறுகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் நிகழ்ந்த தற்கொலைச் செய்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தேசிய போலீஸ் ஏஜன்சி மற்றும் அரசு அலுலகத்தின் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் பூகம்பமும் தொடர்ந்து சுனாமியும் ஜப்பானில் ஏற்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் மட்டும் 3,375 பேர் தற்கொலை செய்துள்ளனர்.ஆனால் கடந்த வருடத்தில் மொத்தம் தற்கொலைச் செய்தவர்களின் எண்ணிக்கை 30,651 ஆகும். மே மாதத்தில் தற்கொலை அதிகரிக்க காரணம் பூகம்பத்தினால் ஏற்பட்ட பீதியாக இருக்கலாம் என்று உயர் அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.
தொடர்ச்சியாக 14-வது ஆண்டில் ஜப்பானில் தற்கொலை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக