ஜெருசலம்:தெற்கு மேற்கு கரை நகரமான அல் கலீலுக்கு அருகே இஸ்ரேல் ராணுவம்
நடத்திய அநீதமான துப்பாக்கிச் சூட்டில் ஃபலஸ்தீன் இளைஞர் ஒருவர் கொலைச்
செய்யப்பட்டார். இன்னொரு நபருக்கு காயம் ஏற்பட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட
மேற்கு கரையில் யதா கிராமத்தில் இத்தாக்குதல் நிகழ்ந்துள்ளது. ஸக்கரியா அபூ இராம் என்பவர்தாம் கொலைச் செய்யப்பட்ட 17 வயது
இளைஞர்
ஆவார். தாக்குதலில் இராமின் உறவினருக்கும் காயம் ஏற்பட்டது. இராமின்
உறவினரை கைது செய்ய முயன்றதை தடுக்க முயன்றபோது இஸ்ரேல் ராணுவம்
துப்பாக்கியால் சுட்டது.
இதனிடையே, காஸ்ஸாவில் நேற்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில்
பாப்புலர் ரெசிஸ்டன்ஸ் கமிட்டியின் தலைவர் சுஹைர் அல் காஸி உள்பட இரண்டு
பேர் கொல்லப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக