திங்கள், மார்ச் 12, 2012

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க சிப்பாயின் வெறிச்செயல் !

US Soldier Kills 16 Afghan Civilians in Shooting Spree in Taliban Areaஅமெரிக்க சிப்பாய் ஒருவர் காந்தஹாரில் வீடுகளினுள் நுழைந்து 15 பேரைக் கொன்ற கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹார் மாகாணத்தில் இன்று ( 11.03.2012) காலையில் இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு வீடாகப் புகுந்து சராமாரியாக அந்த சிப்பாய் சுட்டதில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் குழந்தைகள் ஆவர். படுகொலையை நடத்திய சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் என அமெரிக்க
ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவத்தினை கண்டித்துள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் லியோன் பனெட்டா,  தான் வேதனையடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ மையத்தில் குர்ஆன் எரிக்கப்பட்டதை தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றது. அமெரிக்க ராணுவத்திற்கும் ஆப்கான் பொதுமக்களுக்கும் இடையே முறுகல் நிலை நிலவுகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக