நீண்ட இழுபறிக்குப் பின்னர், காங்கிரஸ் கட்சி உத்தரகாண்டில் ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவைப் பெற்றது.
இதனால் மாநில காங்கிரஸ் தலைவர் யஷ்பால் ஆர்யா உள்ளிட்ட முன்னணி தலைவர்கள், காங்கிரசை ஆதரிக்கும் 36 எம்.எல்.ஏ.க்களையும் கவர்னர் மாளிகைக்கு அழைத்துச் சென்று கவர்னர் மார்கரெட் ஆல்வா முன் ஆஜர்படுத்தினர்.
முதல்வரை தேர்வு
செய்த பின்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும் என கவர்னர் அறிவித்தார். முதல்வருக்கான தேர்வில் காங்கிரஸ் தலைவர் யஷ்பால் ஆர்யா, விஜய் பகுகுணா, ஹரிஷ் ரவாத் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி விஜய் பகுகுணா உத்தரகாண்ட் மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மேலிடம் தெரிவித்தது. ஆனால் தனக்கு முதல்வர் பதவி கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த மத்திய விவசாயம் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஹரிஷ் ரவாத் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் ரவாத்தை முதல்வராக அறிவிக்கக் கோரி ரவாத்தின் ஆதரவாளர்கள், காங்கிரஸ் பொதுச் செயலாளர் திவேதி வீட்டுமுன் போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால் முதல்வர் தேர்வை மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை எனவும், விஜய் பகுகுணா இன்று நிச்சயம் முதல்வராக பதவியேற்பார் எனவும் திவேதி உறுதிபடத் தெரிவித்திருந்தார். அதன்படி விஜய் பகுகுணா இன்று உத்தரகாண்ட் முதல்வராக பதவியேற்றார். இன்னும் 3 அல்லது தினங்களில் 6 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக