செவ்வாய், மார்ச் 13, 2012

பாராளுமன்றத்தில் சரத்பவார் மயங்கி விழுந்தார் !

பாராளுமன்றத்தில் சரத்பவார் மயங்கி விழுந்தார்பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடை பெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தொடரில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்காக மத்திய வேளாண்மை துறை மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத்பவார் பாராளுமன்றத்துக்கு வந்தார். பாராளுமன்ற வளாகத்தில் நின்று கொண்டிருந்த சரத்பவார் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தலை சுற்றல் காரணமாக அவர் மயங்கியதாக
கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால் அவர் தனது காரில் ஆஸ்பத்திரிக்கு சென்றார். சரத்பவாருடன் அவரது மகள் சுப்ரியா கலே எம்.பி., மத்திய மந்திரி பிரபுல் பட்டேல் உடன் சென்றனர். தலை சுற்றலால் ஏற்பட்ட சாதாரண மயக்கம் என்பதால் எந்த பிரச்சினையும் இல்லை. சரத்பவார் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக