செவ்வாய், மார்ச் 13, 2012

ரூ.3 லட்சம் மதிப்புள்ள புற்று நோய் மாத்திரை: ரூ.8,800-க்கு இந்தியாவில் விரைவில் கிடைக்கும் !

ரூ.3 லட்சம் மதிப்புள்ள புற்று நோய் மாத்திரை: ரூ.8,800-க்கு இந்தியாவில் விரைவில் கிடைக்கும்புற்று நோயாளிகளுக்கு நெசாவர் என்ற மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான காப்புரிமையை ஜெர்மனியை சேர்ந்த பேயர் என்ற சர்வதேச மருந்து நிறுவனம் பெற்றுள்ளது. 120 மாத்திரைகள் கொண்ட ஒரு பாக்கெட்டின் விலை தற்போது ரூ.2 லட்சத்து 84 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. தற்போது ஜெர்மனியின் பேயர் நிறுவனம் இந்தியாவில் இந்த மாத்திரைகளை விற்க லைசென்சு (உரிமம்) பெற்றுள்ளது. இங்கு இந்த மாத்திரைகள் மிக குறைந்த
விலையில் அதாவது ரூ.8,800-க்கு விற்கப்பட உள்ளது. இந்த மாத்திரையை ஆரம்ப கட்டத்தில் உள்ள சிறுநீரகம், மற்றும் கல்லீரல் புற்று நோய்களுக்கு பயன்படுத்தலாம். இதன் மூலம் சிறுநீரக புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர் 4 முதல் 5 ஆண்டுகள் வரை கூடுதலாக உயிர் வாழ முடியும். கல்லீரல் புற்று நோய் பாதித்தவர் 6 முதல் 8 மாதங்கள் வரை கூடுதலாக உயிர் வாழலாம். எனவே இந்த மாத்திரை புற்று நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பெயர் நிறுவனம் தனது மருந்து மாத்திரை விற்பனை அலுவலகத்தை ஐதராபாத்தில் விரைவில் தொடங்க உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக