செவ்வாய், மார்ச் 13, 2012

நாளை ரயில்வே பட்ஜெட்-அறிவிக்கப்படுகிறது நாட்டின் முதலாவது புல்லட் ரயில் !

டெல்லி: நாட்டின் முதலாவது புல்லட் ரயில் குறித்த அறிவிப்பு நாளைய ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெறுகிறது. மராட்டிய மாநிலத்தின் மும்பைக்கும் குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத்துக்கும் இடையே இந்த புல்லட் ரயில் இயக்கப்படும். நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் தினேஷ் திவேதி தாக்கல் செய்ய உள்ள ரயில்வே பட்ஜெட்டில் அதிகாரப்பூர்வமாக இதை அறிவிக்க உள்ளார். மும்பை-
அகமதாபாத் இடையே மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் முதலில் இந்த புல்லட் ரயில் இயக்கபடும். மிக அதிகபட்சமாக ஒரு மணிநேரத்துக்கு 350 கிலோ மீட்டர் வேகத்துக்கு இந்த ரயில் இயக்கப்படும். ரூ 60 ஆயிரம் கோடி மதிப்பிலான இத்திட்டத்தை பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் 10 ஆண்டுகளில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அகமதாபாத்- மும்பை இடையேயான தற்போதைய தூரந்தோ ரயிலில் 7 மணி நேர பயணம் எனில் புல்லட் ரயிலில் 4 மணிநேரம்தான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக