சென்னை: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துசெல்வியை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா இன்று சங்கரன்கோவில் தொகுதியில்
சூறாவளிப் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக அவர் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு புறப்பட்டார். அதற்கு முன் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை பிரச்சனை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 2 கடிதங்கள் எழுதியுள்ளேன். அதற்கு நேற்று தான் பதில் வந்தது. அந்த பதிலும் திருப்தி அளிக்கவில்லை. இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுத்ததாக அந்த கடிதத்தில் அவர் குறிப்பிடவில்லை. எனவே, ஐ. நா. மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக