
சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான ஜனதா கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது ஜனதா கட்சியையும் தங்கள் கூட்டணியில் இணைத்து கொள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர் முடிவு செய்தனர். "எங்கள் கூட்டணியில் இணைய சுப்பிரமணியன் சுவாமி மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார்' என்று மூத்த பாஜக தலைவர் எஸ்.எஸ். அலுவாலியா கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
புதிய கட்சியின் வரவால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே பாஜக, ஐக்கிய ஜனதா தளம், சிரோன்மணி அகாலி தளம், சிவசேனை, ராம்தாஸ் அத்வால் தலைமையிலான இந்திய குடியரசுக் கட்சி (ஏ) ஆகியவை கூட்டணியில் உள்ளன. அத்வால் கட்சிக்கும், சுப்பிரமணிய சுவாமி கட்சிக்கும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதி இல்லை. எனவே நாடாளுமன்றக் கூட்டம் தொடர்பான இக்கூட்டத்தில் அக்கட்சி சார்பில் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக