வெள்ளி, மார்ச் 16, 2012

200 பாக்,. வழக்கறிஞர்கள் அடுத்த வாரம் இந்தியா வருகை


  இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சுப்ரீம்கோர்ட்டின் வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த 200 வழக்கறிஞர்கள் அடுத்த வாரம் இந்தியா வர உள்ளனர். இந்தியா -பாகிஸ்தான் இடையே நீதித்துறையை வலுப்படுத்தும்விதமாக, பாகிஸ்தான் நாட்டின் சுப்ரீம் கோர்ட் , வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் யாசின்ஆசாத் தலைமையில் 200 வழக்கறிஞர்கள் வரும் 21-ம் தேதி இந்தியா வருகின்றனர்.

 இவர்கள் டில்லி , சண்டிகர் ஆகிய மாநில ஐ‌கோர்ட் வழக்கறிஞர்களை சந்தித்து பேசுகின்றனர். இரு தரப்பிலும் நீதித்துறை குறித்து விவாதிக்கின்றனர். இரு நாட்டு வழக்கறிஞர்களிடையே நல்லுறவு ஏற்படுத்தும்விதமாக இந்த சந்திப்பு அமையும் .பின்னர் 23-ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள் மாநாடு டில்லியி்ல் நடக்கிறது. இம்மாநாட்டை சுப்ரீம் கோர்ட் நீதிபதி அல்தமாஸ் கபீர் துவங்கி வைத்து பேசுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக