வெள்ளி, மார்ச் 16, 2012

சிரியா நிலைமை கவலை அளிக்கிறது: பான் கீ மூன்


வாஷிங்டன்: சிரியாவில் நிலவும் தொடர் வன்முறை சம்பவம் கவலை அளிக்கிறது. பிரச்னைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என ஐ.நா.பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்தார்.

  சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிராக, மக்கள் புரட்சி ஏற்பட்டு ஒருவருடம் நிறைவுற்றது.                எனினும் அங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது.          
இது குறித்து ஐ.நா.பொதுச்செயலர் பான் கீ மூன் கூறுகையில், சிரியாவில் அரசியல் ரீதியாக பேச்சுவர்த்தை நடத்தி பிரச்னையை தீர்க்க வேண்டும். ராணுவத்தால் அல்ல. சிரியாவில் இதுவரை 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியா நிலைமை கவலை அளிப்பதாக உள்ளதாக கூறினார்.

 இதற்கிடையே சிரியா நிலவரம் குறித்து அரபு லீக் அமைப்பின் தூதராக பேச்சுவார்த்தை நடத்தி வரும், முன்னாள் ஐ.நா. பொதுச்செயலர் கோபி அனன் கூறுகையில், சிரியா விவகாரத்தில் சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு தர வேண்டும் , அங்கு முன்னர் இருந்த அமைதி நிலைமை நீடித்து, மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக