வெள்ளி, மார்ச் 16, 2012

தொடர்ந்து கலவரம்: 1000 சிரியா மக்கள் துருக்கியில் தஞ்சம்...


 சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்துக்கு எதிராக நடைபெற்று வரும் கல வரத்தில் இதுவரை 9,113 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 6,645 பேர் பொதுமக்கள் ஆவர். கலவரத்தை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இருந்தும், போராட்டக்காரர்கள் மீது சிரியா ராணுவம் தொடர்ந்து துப்பாக்கி சூடு மற்றும் குண்டு வீச்சு நடத்தி வருகிறது. இட்லிப் நகரில் பொது மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று 23 பேரின் உடல்கள் கண்டெ டுக்கப்பட்டன. அவர்களின் கண்கள் கட்டப்பட்டுள்ளன. கைகளில் விலங்கு பூட்டப்பட்டு இருந்தது. அவர்களை கொன்று இட்லிப் நகரின் தெற்கு பகு தியில் வீசப்பட்டிருந்தன. இதே போன்று ஹோம்ஸ் நகரின் பல பகுதிகளிலும் பொது மக்கள் கொல்லப்படுகின்றனர்.
எனவே, இட்லிப், ஹோம்ஸ் நகரில் இருந்து பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர். அவர்கள் துருக்கி நாட்டில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். ஹாடாய் மாகாணத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1000 பேர் துருக்கியில் உள்ள அகதிகள் முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை அங்கு மொத்தம் 14,700 பேர்அகதிகளாக உள்ளனர். இந்த தகவலை துருக்கி வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் செல்கக் உனால் நிருபர்களிடம் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக