வியாழன், ஏப்ரல் 07, 2011

கஷ்மீர் போலி என்கவுண்டர் விசாரணை..

ஸ்ரீநகர்: கடந்த ஆண்டு கஷ்மீரின் மச்சில் பிரதேசத்தில் 3 இளைஞர்களை போலி என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்தது.

இதில் தொடர்புடைய ராணுவத்தினரின் கைவசம் சட்டத்திற்கு புறம்பான ஆயுதங்கள் இருந்தனவா? என்பதுக் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென மாநில மனித உரிமை கமிஷன் வலியுறுத்தியுள்ளது.

அப்துல் ரஷீத் எம்.எல்.ஏ அளித்த மனுவைத் தொடர்ந்து மாநில மனித உரிமை கமிஷனின் உறுப்பினர் ஜுவைத் கவுஸ் விசாரணைக்கோரி மாநில அரசிற்கு சிபாரிசுச் செய்துள்ளார்.


கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி ஷஹ்ஸாத் கான், ரியாஸ் அஹ்மத் லோன், முஹம்மது ஷாஃபி லோன் ஆகியோரை ராணுவம் போலி என்கவுண்டரில் கொலைச் செய்தது.

நிறைய சம்பளம் தருவோம் எனக்கூறி அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர். என்கவுண்டர் சம்பவம் விவாதத்தை கிளப்பியதையடுத்து போலீஸ் நடத்திய விசாரணையில் ராணுவத்தின் வாதம் பொய்யானது.

இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு உத்தரவிட்ட ராணுவம் தொடர்புடைய மேஜரை இடைநீக்கம் செய்தது. கமாண்டிங் ஆபீஸர்களை வெளியேற்றியது.

பதவி உயர்வு, விருது ஆகியவற்றிற்காக ராணுவம் போலி என்கவுண்டர் படுகொலைகளை நிகழ்த்தியதாக மனித உரிமை கமிஷனின் உறுப்பினர் கவுஸ் குற்றஞ்சாட்டுகிறார்.

கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதமும், குடும்பத்தினருக்கு அரசு வேலையும் அளிக்கவேண்டுமென கவுஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக