செவ்வாய், ஏப்ரல் 19, 2011

சீனாவில் சூறாவளி: ஆலங்கட்டி மழைக்கு 17 பேர் பலி!


சீனாவில் தென் பகுதியில் நேற்று (திங்கள்) சூறாவளியுடன் பெய்த ஆலங்கட்டி மழைக்கு 17 பேர் பலியானார்கள், 155 பேர் காயம் அடைந்தனர்.
 தெற்கு சீனாவில் குவாங் டாங் மாகாணத்தில் உள்ள போஸ்கான் நகரத்தில் நேற்று கடுமையான சூறாவளி காற்று வீசியது. அதைத்தொடர்ந்து ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
போஸ்கான் நகரம் மட்டு மின்றி அதை சுற்றியுள்ள ஹாங்ஷு, ஷாலோகிங், டொங்கன் ஆகிய இடங்களிலும் கடும் சூறாவளியுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. வினாடிக்கு 45.5 மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
மணிக்கு 164 கி.மீ.வேகத்தில் வீசிய புயலால், 45 வீடுகள் இடிந்து விழுந்தன. 1,087 ஹெக்டேர் பரப்பளவுள்ள  வயல்வெளிகளில் பயிர்கள் நாசம் அடைந்தன.இதனால் அங்கு 17 பேர் பலியானதாகவும், 155 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புயல் மற்றும் மழையால் 50 கோடி ரூபாய் அளவுக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக