லண்டன்: கடந்த சில வருடங்களாகவே உலகம் முழுவதிலும் பரபரப்பாக கவலையோடு பேசப்பட்டு வரும் உலக வெப்பமயமாதல் நிகழ்வின் எதிரொலியாக துருவப்பிரதேசங்களில் உள்ள பனி மலைகள் மற்றும் பனிப்பாறைகள் வேகமாக உருகத் தொடங்கி விட்டன.
இங்கிலாந்தில் உள்ள ஆபெர்ட்வித் பல்கலைக்கழக நிபுணர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த பனிப்பாறைகள் வழக்கத்தை விட 100 மடங்கு அதிகமாக உருகுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் தென் அமெரிக்காவில் உள்ள பனிப்பாறைகள் மிகப் பெரியவை. இந்த பனிமலைகளும் பாறைகளும் கடந்த 350 ஆண்டுகளைவிட தற்போது கூடுதலாக பெருமளவில் உருகி வருவது குறிப்பிடத்தக்கது.
அவற்றில் உள்ள நூற்றுக்கும் அதிகமான பனிப்பாறைகள் தற்போது உருகத் தொடங்கி இருப்பதால் அங்கு கடந்த 30 ஆண்டுகளில் பனிகட்டிகளின் அளவு மிகவும் குறைந்துள்ளது. இந்நிகழ்வு தொடரும் பட்சத்தில் அடுத்த சில ஆண்டுகளில் பனிப்பாறைகளே இருக்காது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
அதேபோன்று ஆல்ப்ஸ் மலையில் உள்ள பனிப் பாறையும் உருகி வருகிறது. இவ்வாறு உருகி வருவதால் பனிப்பாறைகள் இல்லாத நிலை உருவாகி, ஆறுகள் வற்றும் சூழ்நிலை ஏற்படும். அதேநேரத்தில் கடலில் நீர்மட்டம் உயர்ந்து பெரும்பாலான தீவுகள் மற்றும் கடலோர நகரங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உருவாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக