சனி, ஏப்ரல் 16, 2011

இந்தோனேஷியா மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 28 பேர் பலி!

Armed anti-terror police commandos escort Abu Bakar Ba'asyir at Jakarta court on March 14, 2011

இந்தோனேஷியாவில் மசூதி ஒன்றில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 28 பேர் பலியாயினர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
 இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா நகரின் சிரிபான் நகரில்  புகழ்பெற்ற மசூதி ஒன்று உள்ளது. நேற்று வெள்ளிககிழமை என்பதால் ஏராளாமான இஸ்லாமியர்கள் தொழுகைக்காக வந்திருந்தனர்.
அப்போது திடீரென மசூதிக்குள் புகுந்த  மர்ம மனிதன் தனக்குதானே வெடிகுண்டை வெடிக்க செய்தான். இதில் 28 பேர் பலியானதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று  முதன்முதலாக மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்திருப்பது இந்தோனேஷியா அரசினை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த  2003-ம் ஆண்டு முதல் 2005 வரையிலும், சென்ற 2009-ம் ஆண்டு ஜகார்தாவில் ஹோட்டலில் நடந்த குண்டுவெடிப்பிலும், பயங்கரவாதிகளின் சதிச்செயல் காரணமாக இருந்தது.
எனினும்  நாட்டிற்குள் மனித வெடிகுண்டு புகுந்தது குறித்து விசாரணை நடந்து  வருகிறது. மேலும் நேற்று நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு எந்த அமைப்பு ‌பொறுப்பேற்றது என்பது குறித்து தகவல்கள் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக