50 வீதமான குழந்தைகள் பிரசவத்தின்போது இறக்கின்றன |
பிரசவத்தின்போது, இறந்து பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, உலக நாடுகளில் இந்தியாவில் தான் அதிகம் என்று பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகையான லான்செட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும், இறந்து பிறக்கும் குழந்தைகளின் மொத்த எண்ணிக்கையான 18 லட்சத்தில் 66 சதவீத மரணங்கள் இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா, சீனா, வங்கதேசம், காங்கோ, எத்தியோப்பியா, இந்தோனேஷியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தான்சானியா ஆகிய 10 நாடுகளில் ஏற்படுவதாக ஆய்வு கூறுகிறது.
அதிலும் குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் மற்றும் நைஜீரியா ஆகிய ஐந்து நாடுகள் மட்டும் 50 சதவீதத்துக்கு உரியவையாகின்றன.
இந்தியாவில், மாநிலத்துக்கு மாநிலம் இந்த இறப்பு வீதம் மாறு படுகிறது. அதாவது, ஆயிரம் குழந்தைகளுக்கு 22 முதல் 66 குழந்தைகள் வரையான குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன.
இறந்து பிறக்கும் குழந்தைகளின் மரணங்களில் சுமார் 50 சதவீதமானவை, பிரசவ நேரத்தில் தான் ஏற்படுகிறதன. சிக்கலான நேரத்தில் தரமான மருத்துவ வசதி கிடைக்காததே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாத கிராமப் புறங்களில் தான், இந்த இறப்புக்கள் அதிகமாக உள்ளதாக ஆய்வு கூறுகிறது.bbc
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக