திங்கள், ஏப்ரல் 18, 2011

பாக்கிஸ்தானில் திடீர் கலவரம்: 10 பேர் பலி!


பாகிஸ்தானில் காரச்சியில் நேற்று ஏற்பட்ட திடீர் அரசியல் கிளர்ச்சியில் 10 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தானில் வர்த்தக நகரமான காரச்சியில், நேற்று திடீரென கலவரம் வெடித்தது. பாகிஸ்தானில் சாடா நகரில் உள்ள பஜார் முன்பு, ஜூனியாத் ஜகாதி என்பவர் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இவர் ‌ஜமைத்-இல்-இஸ்லாம் கட்சியினைச் சேர்ந்தவர். இவர் அப்பகுதியின் ஒன்றிய கவுன்சில் தலைவராக உள்ளார். இவரது ‌கொலைக்கு மற்ற‌ொரு அமைப்பான முத்தாகிதா -கூவாமி இயக்கம் என்ற அமைப்பும், அவாமி தேசிய கட்சியைச் சேர்ந்தவர்கள் தான் காரணம் என கூறப்படுகிறது.
இதனால் இரு பிரவினருக்கும் ‌இடையே நேற்று திடீர் ‌மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு அ‌மல்படுத்தப்பட்டுள்ளது எனவும், கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறுகையில், தேவைப்பட்டால் கராச்சி நகரில் சிறப்பு அதிரடிப்படையை அனுப்பி அமைதி ஏற்படுத்தப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக