திங்கள், ஏப்ரல் 18, 2011

சட்டவிரோத சுரங்க தொழில் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட எடியூரப்பா மறுப்பு!

கர்நாடக மாநிலத்தில் சுரங்கத் தொழில் சட்ட விரோதமாக நடத்தப்படுவதும் அதில் ஆளும் கட்சியின் அமைச்சர்களே ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்து அது மாநில அளவில் பெரும் பிரச்சனையாகவும் ஆளும் பிரதான கட்சியான பாரதீய ஜனதா கட்சிக்குத் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் சட்ட விரோதமாக சுரங்கத் தொழில் செய்யும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி உச்ச நீதி மன்றத்தால் நியமிக்கப் பட்ட மத்திய உயர் மட்டக் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்து உள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



இது தொடர்பாக பதில் அளிப்பது குறித்த ஆலோசனைக்கு முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் அரசின் உயர் அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, "மாநிலத்தில் நடைபெறும் சட்ட விரோத சுரங்கத் தொழில் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தவிட இயலாது.

காரணம், இது தொடர்பான விசாரணை உச்ச நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.  இப்போதைக்கு இது தொடர்பாகக என்னால் எதுவும் சொல்ல இயலாது. மத்திய உயர் மட்டக் குழு அளித்துள்ள அறிக்கையின் விபரங்களைப் பார்த்த பிறகே கருத்து தெரிவிக்க இயலும்" என்று முடித்துக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக