திங்கள், ஏப்ரல் 11, 2011

சிரியாவில் கலவரம் தீவிரம்: 20 பேர் சு‌ட்டு‌க்கொலை!


சி‌ரியா‌வி‌ல் அ‌திப‌ர் பஷா‌ர் அ‌ல் ஆசா‌த்து‌க்கு எ‌திராக நட‌ந்து வரு‌ம் கலவர‌த்‌தி‌ல் இராணுவ‌த்‌தின‌ர் நட‌த்‌திய து‌‌‌ப்பா‌க்‌கி சூ‌ட்டி‌ல் 20 பே‌ர் ப‌லியானா‌ர்க‌ள்.
சிரியாவில் 11 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வரும் அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதை தொடர்ந்து நேற்று சிரியாவில் டாரா, டமாஸ்கஸ், ஹராஸ்தா, ஹோம்ஸ் உள்ளிட்ட நகரங்களில் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்தன.
போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவத்தினரும், காவ‌ல‌ர்களு‌ம் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 20 பேர் பலியானார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் டாரா நகரில் தான் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு மட்டும் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
டமாஸ்கஸ்சில் 3 பேரும், ஹோம்ஸ் நகரில் ஒரு வரும் பலியாகியுள்ளனர். இத்தகவலை சிரியா தேசிய மனித உரிமை அமைப்பின் தலைவர் அம்மர் குராபி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக