செவ்வாய், ஏப்ரல் 19, 2011

நரேந்திரமோடி பழங்குடியின மக்கள் மீது தாக்குதலை கட்டவிழ்த்து விடுவதாக மேதாபட்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

போபால்: குஜராத் முஸ்லிம் இனப் படுகொலை புகழ் பயங்கரவாதி நரேந்திரமோடி பழங்குடியின மக்கள் மீது தாக்குதலை கட்டவிழ்த்து விடுவதாக நர்மதா பச்சாவோ அந்தோலான் தலைவர் மேதாபட்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிறுபான்மை சமூகத்தை கூட்டுப் படுகொலைச் செய்த ஹிந்துத்துவா மோடி அரசு, ஸர்தார் ஸரோவர் திட்டத்தில் நிலங்களை இழந்த பழங்குடியினருக்கு தற்போது துரோகமிழைப்பதாக மேதா பட்கர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

“சில பழங்குடியின பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகினர். ஆனால், அவர்களுக்கு புகார் அளிப்பதற்கு குஜராத்தில் இடமில்லை.


பலம் பிரயோகித்து நிலங்களை கைப்பற்றிய அரசு அவற்றை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கவோ, வேறு வசிப்பிடங்களை அளிக்கவோ செய்யவில்லை.

மக்கள் நலத்திட்டங்களில் நாட்டமில்லாத மோடி அரசு கார்ப்பரேட் மாதிரி வளர்ச்சியைத்தான் பின்தொடர்கிறது” என மேதா கூறுகிறார்.

மோடி அரசின் வளர்ச்சியை அன்னா ஹஸாரே பாராட்டியது துரதிர்ஷ்டவசமானதும், அங்கீகரிக்க இயலாததுமாகும்.

ஆனால், ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா ஹஸாரேவுக்கு தனது ஆதரவு தொடரும் என மேதா பட்கர் தெரிவித்தார்.

சட்டீஷ்கரில் பழங்குடியின மக்களின் நிலங்களை ஏகபோக முதலாளிகளுக்காக ஆக்கிரமிக்கப்படுகிறது என மேதா குற்றஞ்சாட்டினார்.

லோக்பால் மசோதாவில் தனது நிலைப்பாட்டில் மிருதுவான அணுகுமுறையை அன்னா ஹஸாரே கடைப்பிடிக்கின்றாரே எனக் கேட்டதற்கு, ஊழலுக்கு எதிரான இயக்கம் தற்போதுதான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என மேதா பட்கர் பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக