திங்கள், ஏப்ரல் 18, 2011

தேவையின்றி 226 பெண்களிடம் கருப்பை நீக்கம்: மருத்துவமனைகள் மீது விசாரணை!

இராஜஸ்தான் மாநிலத்தில் தவுஸா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மத்திய அரசின் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் துர்கா பிரசாத் என்ற தன்னார்வலர்   விளக்கம் கோரினார்.
அந்த  மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட மூன்று தனியார் மருத்துவமனைகளில் மார்ச் மாதம் முதல் செப்டம்பர் வரையில் சிகிச்சை பெற்ற 385 பெண்களில் சுமார் 226 பெண்களிடம் கருப்பைகள் அகற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருப்பை சம்பந்தமான நோய்குறித்து ஆலோசனை பெறப்போகும் பெண் நோயாளிகளிடம் தேவையில்லாத ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி கருப்பைகளை அகற்றுவதற்கு ஒரு நோயாளியிடம் சுமார் 12 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரையிலும் இதன்மூலம் பல லட்சங்கள் மேற்கண்ட மருத்தவமனைகள் சம்பாதித்திருப்பதாக பிரசாத் தெரிவித்துள்ளார்.

கருப்பைகள் சம்பந்தமான நோய்க்கான அறுவை சிகிட்சையை  மேற்கண்ட மருத்துவமனைகளில் செய்திருந்தாலும் நோய் குணமாகாமல் வேறொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கருப்பைகளை இழந்த பெண்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
முன்னர் இந்த மருத்துவமனைகளில்  காலாவதியான குளுக்கோஸ் பாட்டில்கள் கர்ப்பிணிகளுக்கு வழங்கியதன் மூலம் 17 பேர் இறந்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பிரச்னை குறித்து மாநில அரசின் சுகாதாரத்துறை முதற்கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக