செவ்வாய், ஏப்ரல் 26, 2011

பீமா பள்ளி துப்பாக்கிச்சூடுவழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

April , திருவனந்தபுரம்: பீமா பள்ளி துப்பாக்கிச்சூடு தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக க்ரைம் ப்ராஞ்ச் போலீஸார் விசாரணை நடத்தியபிறகு கைவிடப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் போலீஸ் அதிகாரிகள் மீது குற்றஞ் சாட்டப்பட்டுள்ள கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க திருவனந்தபுரம் ஜூடிஸியல் முதன்மை வகுப்பு மாஜிஸ்ட்ரேட்(இரண்டு) எ.எம்.பஷீர் க்ரைம் ப்ராஞ்சிற்கு உத்தரவிட்டுள்ளார்.

2009 மே 17-ஆம் தேதி பீமாப்பள்ளி-சிறியதுறை கடற்கரையில் வைத்து நடந்த அநியாயமான போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஆறுபேர் கொல்லப்பட்டனர். 39 பேருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. மரணித்த ஆறு நபர்களின் பின்பகுதியில் குண்டு தாக்கியிருந்தது.


துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட ஹகீமின் உறவினர் இஸ்ஹாக்கின் புகாரைத்தொடர்ந்து துப்பாக்கி சூட்டிற்கு காரணமானவர் என குற்றஞ்சாட்டப்பட்ட துணை கமிஷனர்களான சுரேஷ்குமார், பிரதீப்குமார், ஜான்சன் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டி கொலைக்குற்றத்திற்கும், கொலை முயற்சிக்கும் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக