பிரதமர் டேவிட் கமரோன் |
பிரிட்டனில் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை நீ்ண்டகாலமாக மிக அதிகளவில் காணப்படுவதாக பிரதமர் டேவிட் கமரோன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் குடியேறுவோரின் நிகர அளவைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து வந்து குடியேறியோர் மூலம் பிரிட்டனுக்கு சமூக மற்றும் கலாசார ரீதியில், பொருளாதார ரீதியில் அளவற்ற நன்மைகள் ஏற்பட்டுள்ளதை மறுக்கமுடியாது என்பதை ஒப்புக் கொள்கிறார் பிரதமர் டேவிட் கமரோன்.
ஆனால் 1997ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பிரிட்டனுக்குள் வந்து குடியேறியோரின் எண்ணிக்கையில், அந்தக் காலப்பகுதியில் நாட்டிலிருந்து வெளியேறி வேறு நாடுகளில் குடியேறியோரின் எண்ணிக்கை போக எஞ்சியிருக்கும் நிகர குடியேறிகளின் எண்ணிக்கையான 22 லட்சம் பேரைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், பலகாலமாக மிக அதிகளவில் இருந்துவரும் வெளிநாட்டுக் குடியேற்ற வாசிகளின் எண்ணிக்கை பிரிட்டிஷ் சமூகங்களின் மீது அளவுகடந்த அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
'சமூகநலக் கொடுப்பனவுகளே காரணம்'
பிரிட்டனின் சமூக நல மேம்பாட்டுத்திட்டங்களே, குடியேற்ற வாசிகளின் இந்த அதிகரித்த எண்ணிக்கைக்கு காரணம் எனவும் பிரதமர் வாதிட்டுள்ளார்.
நாட்டிலிருந்து வெளியேறுவோர் போக இங்கு குடியேறுவோரின் எண்ணிக்கையில் காணப்படும் நிகர அளவை ஆண்டுக்கு மிகக்குறைந்த மட்டத்தில் வைத்திருக்க வேண்டுமே தவிர பல ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் இருக்கக் கூடாது என்று கூறுகிறார் பிரதமர்.
நாட்டில் சமூக நலக் கொடுப்பனவு நடைமுறைகளில் கொண்டுவரப்பட்டுள்ள மறுசீரமைப்புகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே இருந்து வருவோரின் தொழில் மற்றும் மாணவர் வீசாக்களில் கொண்டுவந்துள்ள கட்டுப்பாடுகள் மூலமாகவும் அரசாங்கம் ஏற்கனவே இந்த இலக்கை அடைய முயற்சிப்பதாகவும் அவர் கமரோன் தெரிவித்தார்.
விமர்சனங்கள்
பிரிட்டனில் குடியேற்றவாசிகள் |
'டேவிட் கமரோனின் பேச்சு புத்திசாலித்தனமற்றது' என்று வர்ணித்துள்ள லிபரல் டெமோகிரட்டிக் கட்சியின் மூத்த அமைச்சர் ஒருவர், 'இது கடும்போக்கு வாதத்துக்கு எண்ணெய் ஊற்றும் செயல் எனவும் எச்சரித்துள்ளார்.
இங்கு நடத்தப்பட்டுள்ள கருத்துக் கணிப்புக்களின் படி, வாக்காளர்களுக்கு குடியேற்றம் ஒரு பிரச்சனைக்குரிய விடயமாகத் தான் இருந்துவருகின்றது.
bbctamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக