ஞாயிறு, ஏப்ரல் 03, 2011

எம்.பி. இஹ்சான்ஜாப்ரி கொல்லப்பட்ட வழக்கு- மூலக் காரணம் யார் ?

எப்ரல் 3, காந்திநகர்: பிப்ரவரி 2002ல் அஹ்மாதபாத்தில் நடந்த குல்பர்க் சொசைட்டி கலவரத்தில் குஜராத் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஹ்சான் ஜாப்ரி கொல்லப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த வழக்கின் மூலக் காரணம் யார் என்று அறிய சிறப்பு நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்திற்கு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கக் கோரி ஆணை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கை  வழக்கறிஞர் வி.எம். வோஹ்ரா என்பவர் நடத்தி வருகிறார்.


மேலும் அவர் குற்றவாளிகளை நேரில் கண்ட சாட்சியத்தையும், சில முக்கிய பெரும் புள்ளிகளின்  தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்ட குறுந்தகட்டையும் இந்த வழக்கின் முக்கிய சாட்சியங்களாக சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கறிஞர் வோஹ்ராவால் சமர்ப்பிக்கப்பட்ட குறுந்தகட்டினை அரசாங்க ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆராய்ச்சியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதிலுள்ள 27 பேரின் உரையாடல்கள் கண்டறியப்பட்டது.
பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய், குஜராத் முதலமைச்சர் தீவிரவாதி நரேந்திர மோடி மற்றும் சில அரசியல்வாதிகளின் குரல்களும், சில முக்கிய தலைவர்களின் குரல்களும் வெளியாகியுள்ளன.

மேலும் சிறப்பு விசாரணைக்குழு இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்களின் வாக்குமூலங்களையும், குறுந்தகட்டில் உள்ள குரல்களையும் மீண்டும் ஆராய்ந்தால் இந்த வழக்கில் பல முக்கிய திருப்பங்கள் ஏற்படும் என்று கூறியுள்ளது.

இன்னும் கிடப்பில் உள்ள பல விசாரணைகளை மேற்கொண்டால் மேலும் பல உண்மைகள் வெளிவரும். உயர் அதிகாரி பி.சி. பாண்டே வோஹ்ரா குல்பர்க் சொசைட்டியிலிருந்தும், நரோடாவிலிருந்தும் 15-க்கும் மேற்பட்ட தடவை முதலமைச்சர் தீவிரவாதி நரேந்திர மோடியைத் தொடர்பு கொண்டு உள்ளார் என்பதும், அவர் இதுவரை விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதும் சற்று சிந்திக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக