குஜராத் : உலக கோப்பை வெற்றிக்கு பிறகு எல்லா மாநிலமும் அம்மாநில வீரர்களுக்கு பண மழையும் நிலமும் கொடுத்துள்ளது.ஆனால் குஜராத் அரசு கொடுத்த பரிசு என்ன தெரியுமா?
இந்தியாவில் பணக்கார மாநிலங்களில் ஒன்றான குஜராத் அரசு அம்மாநில வீரர்களான யுஸுஃப் பதான் மற்றும் முனாஃப் படெலுக்கு 1 லட்சம் மதிப்புடைய “எக்லவ்யா விருது” தரப்படும் என அறிவித்துள்ளது.
வன்கனர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வான, முஹம்மது ஜாவித் பீர்டாசா கூறும் பொழுது, அந்த 1 லட்சம் கூட அவ்விரண்டு வீரர்களுக்கும் பகிர்ந்தளிக்கப் படும்.இது அவ்விரண்டு வீரர்களுக்கு உண்டான தகுதிக்கும் திறமைக்கும் நிகரானது அல்ல, மேலும் நமது ஜொலிக்கும் நட்சத்திரங்களுக்கு இது இழுக்கு என்று கூறியுள்ளார்.
மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ வான, முஹம்மது ஜாவித் கூறும்பொழுது, மற்ற மாநிலங்களை போல அவ்வீரர்களுக்கு 1 கோடி மற்றும் வீடும் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
இர்ஃபான்,யுஸுஃப் பதான் மற்றும் முனாஃப் படேலுக்கு பயிற்சி அளிப்பவருமான மெஹ்தி ஹஸன் ஷெய்க் அவர்களுக்கும் சிறப்பு மரியாதை செலுத்த வேண்டுமென கூறியுள்ளார்.குஜராத் அரசின் முறையும் நடவடிக்கையும் வியப்பளிப்பதாக கூறியுள்ளார்.
கலுப்புர் தொகுதி எம்.எல்.ஏவான காயசுத்தீன் ஷெய்க் அவ்வீரர்களுக்கு 1 கோடி மற்றும் காந்தி நகரில் வீடும் வழங்க வேண்டுமென ஏற்கனவெ கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக