APRIL, காந்திநகர்: குஜராத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காந்திநகர் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று காந்திநகர் மாநகராட்சியினை பிடித்துள்ளது.
இம்மாநகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் கடந்த 19-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்தது.
காங்கிரஸ் 18 வார்டுகளிலும், பா.ஜ. 15 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் பா.ஜ. கோட்டை என கூறப்பட்ட காந்திநகர் மாநகராட்சியினை காங்கிரஸ் பிடித்துள்ளது.
மேலும் காந்திநகர் பா.ஜ. மூத்த தலைவரும், முன்னாள் துணைபிரதமருமான எல்.கே. அத்வானியின் பார்லிமென்ட் தொகுதியாகும்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில தலைவர் நர்ஹாரி ஆமின் கூறுகையில், முதல்வர் நரேந்திர மோடியின் மக்கள் விரோத அரசுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர்.
இனி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள (2012) நடக்கவுள்ள சட்டசபை பொதுத்தேர்தலிலும் எதிரொலிக்கும். மக்கள் முதல்வர் நரேந்திர மோடியினை புறக்கணிப்பார்கள். இது குஜராத் மாநில காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றி என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக