டோக்கியோ: ஜப்பானை பயங்கர பூகம்பமும் சுனாமியும் தாக்கி பேரழிவை ஏற்படுத்தி இன்றுடன் ஒரு மாதம் நிறைவடையும் நிலையில், இன்று காலையும் அங்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஜப்பானின் வட கிழக்குப் பகுதியில் கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.1 புள்ளிகளாகப் பதிவானது. இதையடுத்து 1 மீட்டர் உயரசுனாமி அலைகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டது. ஆனால், இதுவரை சுனாமி ஏதும் ஏற்படவில்லை.
இந் நிலையில் சரியாக ஒரு மாதத்துக்கு முன் சுனாமி தாக்கியதன் நினைவாக ஜப்பான் முழுவதும் இன்று அஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக