கடந்த 29-3-11 அன்று சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே 7 வருடங்களாக தொழுகை நடந்து வந்த ஒரு மஸ்ஜிதை சமூக விரோத குண்டர்கள் ஆக்கிரமிக்க முயற்சி செய்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல் வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் விரைந்து சென்று அந்த குண்டர்களைத் தடுத்து நிறுத்தி, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
7 வருடங்களுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த உமர் என்ற தொழிலதிபர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள தனது கட்டடத்தின் முதல் மாடியில் ஒரு பகுதியை முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக அன்பளிப்பாக அளித்தார். அன்றிலிருந்து அந்தப் பகுதியிலுள்ள முஸ்லிம்கள் அங்கே தொழுது வந்தனர். இதற்கிடையில் அந்தக் கட்டடத்தின் அடித்தளமும், இரண்டாவது மாடியும், மூன்றாவது மாடியும் சி.ஓ.எஸ். என்ற அறக்கட்டளைக்கு விற்கப்பட்டுள்ளன. இந்த அறக்கட்டளையைச் சார்ந்தவர்கள் முதல் மாடியில் தொழுகை நடக்கும் இடத்தில் ஒரு நிதிக் கம்பெனியை துவக்க திட்டமிட்டார். அந்த இடத்திற்குப் பதிலாக அடித்தளத்தில் ஒரு இடத்தை முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு தருவதாகச் சொன்னார்கள்.
முஸ்லிம்கள் இதனை ஒப்புக்கொள்ளவில்லை. சில நாட்களாகவே பள்ளியை பூட்டுவது, முஸல்லாக்களை கொணடு செல்வது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். அருகிலிருந்த முஸ்லிம்கள் காவல்துறையில் புகாரும் கொடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. சம்பவ தினத்தன்று முதல் மாடியினை அபகரிக்கும் நோக்குடன் சமூக விரோத கும்பல்களை ஏவி விட்டு மஸ்ஜிதின் வாசலை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்தனர். மஸ்ஜிதின் அடையாளங்களை அழிக்க முயற்சி செய்தனர். அருகிலுள்ள கடை வியாபாரிகள் மீண்டும் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் வந்த காவல்துறையினரோ அந்தக் குண்டர்களை தடுக்க எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. சட்டத்தைப் பாதுகாக்கவேண்டிய சென்னை உயர்நீதிமன்றத்தின் எதிரிலேயே இந்த அக்கிரமங்கள் அரங்கேறிக்கொண்டிருந்தன. சம்பவ இடத்திற்கு விரைந்த பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் உடனே அந்தக் குண்டர்களைத் தடுத்து நிறுத்தி, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் முஸ்லிம்கள் இந்தச் வன்முறை செயலைக் கண்டிக்கும் விதமாகவும் சம்பந்தப்பட்ட சமூக விரோத கும்பல் மீது FIR பதிவு செய்ய கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதிய தொழுகையான ளுஹர் தொழுகையை சாலையின் நடுவிலேயே தொழுதனர். பின்னர் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்டச் செயலாளர் ஷாஹித் மற்றும் ஜமாஅத்தார்கள் இணைந்து இந்தச் சமூக விரோதிகளுக்கெதிராக காவல்துறையிடம் புகார் மனு அளித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக