ஞாயிறு, ஏப்ரல் 17, 2011

காஷ்மீர் மாநில பாரதீய ஜனதா எம்.எல்.ஏக்கள் 11 பேர் ராஜினாமா..

காஷ்மீர் மாநிலத்தில் பாரதீய ஜனதாவுக்கு 11 எம்.எ.ல்.ஏ.க்கள் உள்ள நிலையில், பாரதீய ஜனதா சார்பில் நிறுத்தப்பட்ட ஒரே வேட்பாளரான ரஞ்சித் சிங்குக்கு 4 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.அவர்களில் 7 பேர் கட்சி மாறி ஓட்டுப் போட்டுள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தில் 6 மேல் சபை (எம்.எல்.சி.) உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜம்முவில் நடந்தது. இதில் 5 இடங்களில் தேசிய மாநாட்டு கட்சி- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.


பாரதீய ஜனதா சார்பில் நிறுத்தப்பட்ட ஒரே வேட்பாளரான ரஞ்சித் சிங்குக்கு 4 ஓட்டுகளே கிடைத்தன. பாரதீய ஜனதாவுக்கு 11 எம்.எ.ல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்களில் 7 பேர் கட்சி மாறி ஓட்டுப் போட்டுள்ளனர். கட்சி மாறி ஓட்டுப்போட்ட விவகாரம் பாரதீய ஜனதா தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டளிக்குமாறு எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்திருந்ததையும் மீறி கட்சி மாறி வாக்களித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாரதீய ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் காஷ்மீர் மாநில பாரதீய ஜனதா எம்.எல்.ஏக்கள் 11 பேரும் நேற்று இரவு ராஜினாமா செய்தனர். ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கும், கட்சியின் பொது செயலாளருக்கும்
அனுப்பி வைத்தனர். கட்சி மாறி ஓட்டுப் போட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வசதியாக 11 பேரும் ராஜினாமா செய்து இருப்பதாக சட்டமன்ற பாரதீய ஜனதா துணைத் தலைவர் ஜுகால்கிஷோர் சர்மா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக