சனி, ஏப்ரல் 16, 2011

விசுவ இந்து பரிஷத்துடனான உறவை நிர்மோகி அகாரா முறித்தது!


1989ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த விசுவ இந்து பரிஷத்துடனான உறவை நிர்மோகி அகாரா அமைப்பு துண்டித்துள்ளது. ராம்ஜென்ம பூமி நிலத்தின் மீதான உரிமையை விசுவ இந்து பரிஷத் கோரி வருவதையும் நிர்மோகி அகாரா நிராகரித்துள்ளது.


பாபர் மசூதி - ராம் ஜென்மபூமி வழக்கில் இந்துக்களின் தரப்பில் மிக முக்கியமான வாதி நிர்மோகி அகாரா அமைப்பு. இந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடும் செய்துள்ள நிர்மோகி அகாரா, ராமர் ஜென்மபூமி நிலத்தை ஆக்கிரமிக்க விசுவ இந்து பரிஷத் முயற்சி செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளது.



ராம் லல்லாவின் சிறந்த நண்பன் என்று விசுவ இந்து பரிஷத் கூறிக் கொள்வதை நிராகரித்த நிர்மோகி அகாராவின் தலைமை சாமியார் மகந்த் ஜகன்னாத் தாஸ், "ராமர் ஜென்மபூமி இடம் தொடர்பாக உரிமை கோர விசுவ இந்து பரிஷத்திற்கு எவ்வித உரிமையும் இல்லை. அந்த அமைப்பு மதக்கலவரங்களைத் தோற்றுவித்து நாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவித்தது. ராமர் கோயில் இயக்கம் தொடர்பாக ஏற்பட்ட அனைத்து தவறான விளைவுகளுக்கும் விசுவ இந்து பரிஷத் அமைப்பே காரணம்" என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக