செவ்வாய், ஏப்ரல் 12, 2011

சீனா 3-வது இடம், இந்தியா 41-வது இடம் : உலகின் மிகப்பெரிய சுற்றுலா தளம்!


உலகின் மிகப்பெரிய மூன்றாவது சுற்றுலா தளமாக சீனா இடம் பிடித்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இதில் இந்தியா 41-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
 ஐ.நா.வுக்கான உலக சுற்றுலா அமைப்பின் சார்பில் உலகின் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மிகப்பெரிய 50 சுற்றுலா தளம கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. 
அமெரிக்க முதலிடத்தில் உள்ளது. இது 78.95 மில்லின் சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது.
இரண்டாம் இடத்தில் பிரான்ஸ் உள்ளது. இது 60.88 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது.
மூன்றாம் இடத்தில் ஆசிய நாடான சீனா 52.02 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது.
சீனாவிற்கு , ஸ்பெயின் நிதி உதவி செய்து வந்ததன் காரணமாக , சீனாவில் சுற்றுலா பயணிகளின் வருகை 9 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் இந்தியா மிகவும் பின்தங்கி 41-வது இடத்தில் உள்ளது. இந்தியாவிற்கு கடந்த 2010-11- ஆண்டில், வெறும் 5.06 மில்லியன் சுற்றுலாபயணிகளே வந்துள்ளனர்.
மேலும் ஐ.நா.வின் அறிக்கையின் படி முதல் 10 ஆசிய நாடுகளில் மலேஷியா முதலிடம் வகிக்கிறது. இந்நாடு கடந்த 2010-11-ம் ஆண்டு 24.06 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளதாவும் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக