இன்று அதிகாலை சவுந்தரவள்ளியும் பாலசுப்பிரமணியமும் அரளி விதையை அரைத்து குடித்தனர். மகள் திவ்யாவுக்கும் கொடுத்தனர். காலை வெகு நேரமாகியும் வீட்டின் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்து வீட்டார் பால சுப்பிரமணியத்தின் வீட்டுக் கதவை திறந்தனர்.
உள்ளே பாலசுப்பிரமணியமும், சவுந்தரவள்ளியும் இறந்து கிடந்தனர். திவ்யா மட்டும் உயிருக்கு பேராடிக்கொண்டு இருந்தார். உடனடியாக அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். வீட்டில் இருந்து பாலசுப்பிரமணியம் எழுதி வைத்த கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
6 மாதத்துக்கு முன்பு உயிருக்கு உயிராய் வளர்த்த எங்களது அன்பு மகன் அஜய் பாம்பு கடித்து இறந்து விட்டான். அவன் இல்லாத உலகத்தில் வாழ்வதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. அதனால் அவன் இருக்கும் இடம் தேடி செல்கிறோம். எங்கள் சாவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக