இந்நிலையில் வீடு இடிப்பு புகாரின் பேரில்www.asiananban.blogspot.com சசிகலா சகோதரர் திவாகரன், திருவாரூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். உறவினரான ராவணன், மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார்.
இந்நிலையில் தற்போது நில அபகரிப்பு புகாரின் பேரில் சசிகலா கணவர் நடராஜனும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூரை சேர்ந்த ராமலிங்கம் என்பவர், தஞ்சை போலீசாரிடம் கொடுத்த புகாரில், தஞ்சையின் பிரதான இடத்தில் உள்ள தனக்கு சொந்தமான 15 ஆயிரம் சதுர அடி நிலத்தை நடராஜன் தூண்டுதலின் பேரில் சிலர் ஆக்கிரமித்து கொண்டதாகவும், இடத்தை திருப்பி கேட்டபோது நடராஜனுடன் சேர்ந்து சிலர் தமக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார். இதன் பேரில் தஞ்சை டி.ஐ.ஜி., அமல்ராஜ் தலைமையிலான போலீசார் பெசன்ட் நகரில் உள்ள வீட்டிலிருந்த நடராஜன் மற்றும் ஒருவரை அழைத்து சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக